இந்தியா-பிரான்ஸ் இடையே ரூ.61,000 கோடி போர்விமான என்ஜின் ஒப்பந்தம்
இந்தியா-பிரான்ஸ் இடையே ரூ.61,000 கோடி மதிப்பிலான போர்விமான என்ஜின் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் எதிர்கால போர்விமான திட்டங்களுக்கு முக்கிய அடி உறுதியாக, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ரூ.61,000 கோடி மதிப்பில் புதிய போர்விமான என்ஜின் ஒன்றை கூட்டாக உருவாக்க திட்டமிட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக The Economic Times செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கூட்டுத் திட்டத்தின் கீழ், 120 கிலோநியூட்டன் (kN) thrust engine ஒன்றை பிரான்சின் Safran நிறுவனம் இந்தியாவுடன் சேர்ந்து வடிவமைக்க உள்ளது.
இது Advanced Medium Combat Aircraft (AMCA) உள்ளிட்ட எதிர்கால யுத்தவிமானங்களுக்கு பயன்படுத்தப்படும்.
Safran-இன் முழுமையான தொழில்நுட்ப பரிமாற்ற உறுதி மற்றும் AMCA திட்டத்துடன் நேர்த்தியான பொருத்தம் ஆகியவைகள் இந்த ஒப்பந்தத்தில் முக்கிய பங்கு வகித்தன. இதற்காக பிரித்தானிய நிறுவனமான Rolls Royce அளித்த திட்டத்தையும் இந்தியா பரிசீலித்தது.
இதுவரை இந்தியாவிலுள்ள எல்லா யுத்தவிமானங்களும் வெளிநாட்டு இன்ஜின்களில் செயல்படுகின்றன. இந்த புதிய ஒப்பந்தம், இந்தியா தன்னிறைவு பெறும் வழியில் ஒரு மிகப்பாரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, Kaveri எஞ்சின் திட்டம், யுத்தவிமான பயன்பாட்டுக்கு தேவையான thrust பெறத் தவறியதால், தற்போது UCAV (Unmanned Combat Aerial Vehicle) மற்றும் கடற்படை பயன்பாடுகளுக்காக மறுதொகுக்கப்படுகிறது.
மேலும், LCA Mk-1A விமானத்துக்கான GE-F404 என்ஜின்கள் ஜூலை 15 அன்று அமெரிக்காவில் இருந்து வந்துள்ளன. HAL நிறுவனம் F414 என்ஜின் உள்ளூரில் உற்பத்தி செய்யவும் GE Aerospace-இன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India France fighter engine deal, Rs 61000 crore jet engine project, Safran AMCA engine India, Rolls Royce vs Safran India, Kaveri engine UCAV update, LCA Mk-1A GE-F404 delivery, F414 engine HAL GE partnership, India defence engine news, Jet engine tech transfer India, AMCA engine development 2025