ஜேர்மனியுடன் இணைந்து புதிய ஆழ்கடல் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கவுள்ள இந்தியா
ஜேர்மனியுடன் இணைந்து ஆழ்கடல் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்திய அரசு ஜேர்மனியுடன் இணைந்து Project-75 India (P-75I) திட்டத்தின் கீழ் ஆழ்கடல் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் மதிப்பு ரூ.70,000 கோடியாகும்.
இந்திய கடற்படைக்கு ஆழ்கடலில் நீஙபா நேரம் செயல்படக்கூடிய புதிய தலைமுறை நீர்மூழ்கி கப்பல்களை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இவை Air Independent Propulsion (AIP) எனப்படும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படவுள்ளன.
இந்த AIP தொழில்நுட்பம் நீர்மூழ்கி கப்பல்களுக்கு 3 வாரங்கள் வரை நீருக்கு அடியில் செயல்படக்கூடிய திறனை வழங்கும்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின்பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் Mazagon Dock Shipbuilders Limited (MDL) நிறுவனத்தின் தலைமையில் நடைபெறவுள்ளது. ஜேர்மனியிலிருந்து முக்கிய தொழில்நுட்ப ஆதரவு பெறப்படவுள்ளது.
ஒப்பந்த பேச்சுவார்த்தை 6 முதல் 8 மாதங்களில் முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய கடற்படையில் பழைய 10 நீர்மூழ்கி கப்பல்கள் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய கப்பல்களின் உருவாக்கம் அவசியமாகியுள்ளது.
இந்த நடவடிக்கைகள், சீனாவின் கடற்படை விரிவாக்கம் மற்றும் பாகிஸ்தானுடன் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Project 75I submarine deal, India Germany defence partnership, Air Independent Propulsion submarines, Indian Navy modernization, Mazagon Dock Shipbuilders Limited, India Germany, P-75I submarine deal