இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்! டெஸ்ட் சாம்பியன்ஸ் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா?
டெஸ்ட் சாம்பியன்ஸ் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மழையால் ஆட்டம் ரத்து
இந்தியா-வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.
மழை குறுக்கீடு காரணமாக ஆட்டத்தின் முதல் நாளில் இடை நிறுத்தப்பட்ட நிலையில், முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பு 107 ஓட்டங்கள் குவித்து இருந்தது.
இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இந்நிலையில் இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தால் இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஸ் ஷிப் - 2025 இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
ஒருவேளை இந்த போட்டி டிராவில் முடிந்தால், இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஸ் ஷிப் - 2025 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் குறைந்தது 2 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.
தற்போது டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 86 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அவுஸ்திரேலியா 2வது இடத்திலும் உள்ளது.
3வது இடத்தில் இலங்கை அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |