கிடு கிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை.. வேதனையில் இல்லத்தரசிகள்
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,105க்கும், சவரன் ரூ.40,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,569க்கும், சவரன் ரூ.44,552க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதுமட்டுமின்றி வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 76.00-க்கு விற்பனையான நிலையில் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் இன்று 1.60 காசுகள் அதிகரித்து ரூ. 77.60க்கு விற்பனை செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.