2023 ODI உலகக் கோப்பையால் இந்தியாவிற்கு ரூ.11,000 கோடி பொருளாதார நன்மை
2023 ODI உலகக் கோப்பையின் மூலம் இந்தியாவிற்கு ரூ. 11,000 கோடி அளவிற்கு பொருளாதார நன்மைகள் கிடைத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்ட 2023 ODI உலகக் கோப்பையின் பொருளாதார தாக்க அறிக்கையின் படி, இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் 11,637 கோடி ரூபாய் (1.39 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவிற்கு பொருளாதார நன்மையை ஏற்படுத்தியுள்ளது.
இது உலகக் கிண்ணத்தின் வரலாற்றிலேயே மிகப்பாரிய விளையாட்டாக விளங்குகிறது.
இந்த விளையாட்டின் மூலம் இந்தியாவின் சுற்றுலா வர்த்தகத்திற்கு 861.4 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைத்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் சுற்றுலா துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன, மேலும் 48,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் நேரடியாக வழங்கப்பட்டன.
2023 ODI World Cup உலகக் கிண்ணம் 1.25 மில்லியன் ரசிகர்களை ஈர்த்ததோடு, அதில் 75% பேர் முதல் முறையாக ஒடிஐ போட்டிகளை நேரில் பார்த்தனர்.
மேலும், உலகக் கிண்ணத்தின் மூலம் இந்தியாவில் புதிய சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.
19% சர்வதேச ரசிகர்கள் முதல்முறையாக இந்தியாவுக்கு வந்தனர், இது இந்தியாவின் சர்வதேச சுற்றுலா புகழை மேலும் உயர்த்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ICC 2023 ODI World Cup economic impact report, India overall economic benefit, International Cricket Council, ICC ODI World Cup 2023, India Generated 'Economic Benefit' Of Rs.11,637 Crores