இந்தியர்களுக்கு புத்தாண்டு சிறப்பு பரிசு: Petrol, Diesel விலை 10 சதவீதம் வரை குறைய வாய்ப்பு
புத்தாண்டை எதிர்நோக்கியுள்ள இந்திய குடிமக்களுக்கு மிகப்பாரிய பரிசாக, இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை குறைப்பு குறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லிட்டருக்கு பத்து ரூபாய் குறையும் வாய்ப்பு உள்ளது.
2024 ஏப்ரல் மற்றும் மே லோக்சபா தேர்தலுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை குறைக்கும் திட்டத்தை பெட்ரோலிய அமைச்சகம் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல், டீசல் விலை இரண்டும் 10 ரூபாய் குறையலாம். இரண்டு எரிபொருட்கள் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ.8 மற்றும் ரூ.6 குறைக்கவும், டீசல் விலையை குறைக்கவும் மத்திய அரசு முன்னதாக முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், இந்தியாவிலும் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.96.71 மற்றும் டீசல் விலை ரூ.89.62 ஆக உள்ளது. இருப்பினும், சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற சில முக்கிய பாரிய நகரங்களில் எரிபொருள் விலை 100 ரூபாய்க்கு மேல் உள்ளது.
இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.110ஐ தாண்டியுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக சந்தை மாற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Petrol Diesel Price Drop, Petrol and Diesel prices likely to be cut by Rupees 10 per litre, Chennai Petrol Price, Central Government cut Petrol Price