இந்தியாவின் 5 ஆண்டு விசா திட்டம்: அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர் பாராட்டு
இந்தியாவின் 5 ஆண்டு விசா திட்டத்தை அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் பாராட்டியுள்ளார்.
அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர் ஆண்டனி லூயிஸ் (Klor Antony Louis) இந்தியாவின் 5 ஆண்டு விசா பெற்றதற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
அவர் தனது X பக்கத்தில், "Trump says foreigners go kick rocks. Modi says ‘Welcome home, bhai" என பதிவிட்டதுடன், தனது விசா புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்த விசா 2025 செப்டம்பர் 23 அன்று வழங்க்கப்பட்டதாகவும், 2030 வரை செல்லுபடியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, இந்தியா உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் நோக்கில் எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக AI, Blockchain போன்ற துறைகளில் இந்தியா ஒரு புதுமை மையமாக மாறும் முயற்சியில் உள்ளது.
Klor Antony போன்ற நிபுணர்களின் பாராட்டுக்கள், இந்தியாவின் திறந்த குடியேற்ற கொள்கையை வெளிப்படுத்துகின்றன.
It’s official! India is opening its doors to foreign blockchain & AI builders.
— Tony Klor (@TonyCatoff) October 3, 2025
I’ve just been granted a girthy 5-year India visa 🇮🇳🇮🇳🇮🇳
Trump says foreigners go kick rocks. Modi says welcome home bhai 🏠 pic.twitter.com/Lm8Py8j3Pp
e-Visa திட்டத்தின் விரிவாக்கம்
இந்தியாவின் e-Visa திட்டம் மூலம், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் குடியிருப்பாளர்கள் e-Tourist, e-Business, e-Medical, e-Conference போன்ற வகைகளில் ஓன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
புதிய விதிகளின்படி, e-Tourist, e-Business விசாக்களுக்கு 180 நாட்கள் வரை தொடர்ச்சியாக தங்க அனுமதி வழங்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India 5-year visa for foreigners, India B-1 visa for tech experts, Modi welcomes global tech talent, India visa for blockchain builders, AI professionals visa India, India visa for American citizens