மாலத்தீவுக்கு இந்தியா எப்போதும் துணையாக இருக்கும்: இந்திய அமைச்சர் உறுதி
மாலத்தீவுக்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அமைச்சர் பேசியது
அரசுமுறை பயணமாக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா கலீல் டெல்லி வந்துள்ளார். அப்போது அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
இருதரப்பினரும், இந்தியா வழங்கும் நிதி உதவி வாயிலாக மாலத்தீவில் மூன்றாம் கட்ட சமூக மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா கலீல் பேசுகையில், "இந்தியா-மாலத்தீவுக்கான விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கூட்டுப் பார்வையை நனவாக்குவதில் இந்திய அரசுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்காக அதிபர் முகமது முய்சு உறுதியாக இருக்கிறார்" என்றார்.
மேலும், மாலத்தீவிற்கு தேவையான நேரத்தில் இந்தியா அவசர நிதி உதவியை வழங்கியதாகவும் அவர் பாராட்டினார்.
பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், "எல்லை தாண்டிய பரிவர்த்தனைக்கு உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு கையொப்பமிடப்பட்டுள்ளது.
நாங்கள் பல்வேறு துறைகளில் எங்களது ஈடுபாட்டை அதிகரித்துள்ளோம். இந்தியா எப்போதும் மாலத்தீவுக்கு துணை நிற்கும் என்பதை நான் கூற விரும்புகிறேன்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசு கொள்கையின் உறுதியான வெளிப்பாடாக மாலத்தீவு திகழ்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |