அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுமா என பதற்றம் வேண்டாம்: அதிகாரிகள் அறிவுறுத்தல்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள மோதல் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதற்றம் வேண்டாம்
பொதுவாகவே, போர், இயற்கைச் சீற்றங்கள் கொள்ளைநோய் முதலான அசாதாரண நிகழ்வுகளின்போது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்க போட்டி போடுவதுண்டு. அது, panic buying என அழைக்கப்படுகிறது.
ஆனால், panic buyingக்கான தேவை இல்லை. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுமா என மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
நம்மிடம் போதுமான உணவுப்பொருட்கள் உள்ளன. எரிவாயு கையிருப்பும் போதுமான அளவில் உள்ளது, விநியோகத்திலும் எந்த பாதிப்பும் இல்லை.
உரம், பருப்பு வகைகள் என அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன.
சரக்குகளைக் கொண்டு செல்லும் விமான சேவை, ரயில்கள், சாலை போக்குவரத்து என எதுவும் பாதிக்கப்படவில்லை.
ஆகவே, மக்கள், குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள மக்கள், பயந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்கத் தேவையில்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |