இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து தொடரை கைப்பற்றிய இந்தியா! நடராஜனை பாராட்டிய இலங்கை அணி வீரர்
இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை இந்தியா வென்று சாதனை படைத்ததற்கு இலங்கை ஜாம்பவான் அர்னால்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் நேற்று நடைபெற்ற நிலையில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜனின் அசத்தலான பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
Stunning series #INDvENG Just couldn't pick a winner right till the end .. What a knock Sam Curran and Nattu holding on in the end. Congratulations to #teamindia Its been a joy to watch
— Russel Arnold (@RusselArnold69) March 28, 2021
இது குறித்து இலங்கை ஜாம்பவான் ருசல் அர்னால்ட் டுவிட்டரில், பிரமிக்க வைக்கும் தொடராக இந்தியா - இங்கிலாந்து தொடர் இருந்தது. கடைசி வரை ஒரு வெற்றியாளரைத் தேர்வுசெய்ய முடியவில்லை.
சாம் குர்ரான் சிறப்பாக ஆடினார்.
நடராஜனும் இறுதியில் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.