இந்தியா இதை மட்டும் செஞ்சா போதும்... நல்ல ரிசல்ட் தெரியும்! வாசிம் அக்ரம் சொல்லும் ஐடியா
உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த அக்டோபர்(20121) மாதம் 17-ஆம் திகதி துவங்கிய உலகக்கோப்பை டி20 போட்டி, நவம்பர் மாதம் 14-ஆம் திகதி முடிவடைந்தது. இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இது இந்திய ரசிகர்களுக்கு மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
இதற்கு முக்கிய காரணம், இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்வியை பதிவு செய்தது. அதன் பின் அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்துவுடன் என அடுத்தடுத்து தோல்வியடைந்தது.
இருப்பினும், நமீபியா, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து போன்ற அணிகளை இந்திய அணி வென்றாலும், நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் பிரபல விளையாட்டு ஊடகமான Sport360-க்கு அளித்துள்ள பேட்டியில், இந்திய ஒரு விஷயத்தை நிச்சயமாக சிந்திக்க வேண்டும். இந்திய வீரர்களை, வெளிநாடுகளில் நடைபெறும் லீக் தொடர்களில் விளையாட அனுமதிக்க வேண்டும்.
அவர்களுக்கு ஐபிஎல் தொடர் மட்டும் போதாது. வீரர்கள், வெவ்வேறு நாடுகளில் ஒன்று அல்லது இரண்டு லீக்குகளில் விளையடும் போது, அவர்களுக்கு வெவ்வேறு ஆடுகளுங்கள், வெவ்வேறு அணிகள் அதிலிக்கும் வீரர்களின் நிலை போன்றவற்றை அனுபவமாக பெற முடியும்.
இந்திய அணியால் முதல் ஆட்டத்திற்குப் பிறகு, அடுத்த போட்டியில் மீளவே முடியவில்லை. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகின் அப்ரிடி வீசிய முதல் ஓவரிலே இந்திய அணி முக்கியமான விக்கெட்டை இழந்தது.
பாகிஸ்தானும், இந்தியாவும் அதிக கிரிக்கெட்டுகள் விளையாடுவதில்லை, குறிப்பாக பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர்களான ஷகின் அப்ரிடி, ஹரிஷ் ரவுப் மற்றும் ஹசன் அலியை குறைந்த அணி வீரர்களே எதிர் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.