விஜய் மல்லையாவை நாடுகடத்த பிரான்சிடம் உதவி கோரியுள்ள இந்தியா
இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடுகடத்த உதவுமாறு பிரான்சுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா
இந்தியாவில் பல வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடியை கடனாக பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, இந்திய உச்சநீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
Photograph:(Reuters)
பிரான்சிடம் உதவி கோரியுள்ள இந்தியா
இந்நிலையில், விஜய் மல்லையாவை நாடுகடத்த பிரான்சிடம் இந்தியா உதவி கோரியுள்ளது. விஜய் மல்லையா, தற்போது பிரித்தானியாவில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
என்றாலும், பல நாடுகளில் அவருக்கு சொத்துக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பிரான்ஸ். ஆக, எந்தெந்த நாடுகளிலெல்லாம் விஜய் மல்லையாவுக்கு சொத்துக்கள் உள்ளனவோ, எந்தெந்த நாடுகளுடனெல்லாம் இந்தியா நாடுகடத்தும் ஒப்பந்தம் செய்ள்ளதோ, அந்த நாடுகளில் ஒன்றிற்கு விஜய் மல்லையா செல்லும் நிலையில், அங்கிருந்து அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த இந்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில், சமீபத்தில் இந்திய பிரான்ஸ் அதிகாரிகளின் சந்திப்பொன்றில், விஜய் மல்லையாவை நாடுகடத்த பிரான்சிடம் இந்தியா உதவி கோரியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |