இந்தியாவின் நம்பர் 1 டிவி நடிகை! ஷாருக்கானை விட அதிகம்..23 வயதில் கோடிகளில் சொத்து
இந்தியில் 23 வயது தொலைக்காட்சி நடிகையொருவர் அதிக ஊதியம் பெறுவராக மாறியுள்ளார்.
50 மில்லியன்
ஜன்னத் ஸுபைர் ரஹ்மானி என்ற இளம் நடிகைதான் தற்போது இந்திய அளவில் பிரபலமானவராக உள்ளார். இதற்கு காரணம் 23 வயதிலேயே இவரது மலைக்க வைக்கும் சொத்து மதிப்புதான்.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 50 மில்லியன் பின்தொடர்பாளர்களை வைத்துள்ள ஜன்னத் ஸுபைர், பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் ஷாருக் கானையே (49.7 மில்லியன்) முந்தியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி நாடகம் ஒன்றில் அறிமுகமான இவர், சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
18 லட்சம்
ஆனாலும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஜன்னத் ஸுபைர், ஒரு எபிசோட் நடிப்பதற்கு 18 லட்சம் ஊதியமாக பெறுவதாக கூறப்படுகிறது.
இவருக்கு மும்பையில் சொந்த வீடு உள்ள நிலையில், இவரது சொத்து மதிப்பு 3 மில்லியன் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 25 கோடி) என தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |