இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கெய்ர் ஸ்டார்மர்: முக்கிய நோக்கம் என்ன?
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தியா வரும் பிரித்தானிய பிரதமர்
அக்டோபர் 8 மற்றும் 9ம் திகதிகளில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை உறுதி செய்துள்ளது.
பிரித்தானிய பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மேலும் ஸ்டார்மரின் இந்த பயணம் ஜூலை மாதம் இந்திய பிரதமர் மோடியின் பிரித்தானிய பயணத்தை தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
சுற்று பயணத்தின் நோக்கம்
இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு அக்டோபர் 9ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.
மேலும் இந்த சந்திப்பில் இந்தியா-பிரித்தானியா இடையிலான வியூக கூட்டாண்மையின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வு செய்யப்படும் என்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |