சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல்
ரூ.10,00 கோடி மதிப்பில் இந்திய விமானப்படைக்கு ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் (IAF) தாக்குதல் திறனை மிகுந்த அளவில் உயர்த்தும் முக்கிய திட்டம் ஒன்றுக்கு ஜூலை 3-ஆம் திகதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் தகவை வாங்கும் குழு (DAC) ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தில், ரூ.10,000 கோடி மதிப்பில் 3 ISTAR விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ISTAR (Intelligence, Surveillance, Target Acquisition, and Reconnaissance) விமானங்கள், துல்லியமான உளவுத் தகவல்களை வழங்குவதில் நவீன தொழில்நுட்பத்தை கொண்டவை.
இதற்காக, Boeing அல்லது Bombardier நிறுவனங்களிடம் இருந்து விமானங்கள் வாங்கப்பட்டு, அதில் DRDO உருவாக்கும் உளவுச் சென்சார்கள் இணைக்கப்படும்.
ISTAR என்ன செய்யும்?
ISTAR என்பது வெறும் உளவுத்துறைக் கண்காணிப்பு அல்ல. இது ரேடார், எலக்ட்ரோ-ஆப்டிக்கல், சிக்னல்ஸ் இன்டலிஜென்ஸ் (SIGINT), எலக்ட்ரானிக் இன்டலிஜென்ஸ் (ELINT) ஆகியவற்றை ஒரே பிளாட்ஃபார்மில் ஒருங்கிணைத்து, வேகமாக பயணிக்கக்கூடிய, நீண்ட தூரம் செல்லும் விமானத்தில் நிறுவப்படுகிறது.
இவை போர்க்கள நிலையை நேரடியாக கண்காணித்து, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் துல்லிய தகவல்களை கமாண்ட் மையங்களுக்கு உடனடியாக அனுப்பும் திறன் கொண்டது.
இன்றைய புவியியல் அமைப்பில், தகவல் ஆட்சி என்பது போர் வெற்றிக்கு அவசியமானது. ISTAR விமானங்கள், எதிரியின் நகர்வுகளை கண்காணிக்கவும், முக்கிய இலக்குகளை அடையாளம் காணவும், துல்லிய தாக்குதல்களை திட்டமிடவும் பயன்படும்.
சீனா, பாகிஸ்தானுக்கு கவலை?
இந்த புதிய ISTAR விமானங்கள் 2030-க்குள் இந்தியா பெற்றுக் கொள்ளவிருக்கின்றது.
பாகிஸ்தான், சீனா போன்ற எதிரிகளுக்கு இது மிகவும் அதிர்ச்சியான தகவலாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது இந்தியாவை உயர்தர உளவு தாக்குதல்களுக்குத் தயாராக உள்ள நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ISTAR aircraft India, Modi defence masterstroke, IAF surveillance boost, DRDO airborne systems, India vs China military tech, Rajnath Singh DAC approval, India defence upgrade 2025, Precision strike IAF, ISTAR missile aircraft India, Indian Air Force new weapons