நீர்மூழ்கிக் கப்பல்களை மேம்படுத்த ரூ.2,867 கோடி மதிப்பில் இந்திய அரசு ஒப்பந்தம்
நீர்மூழ்கிக் கப்பல் திறன்களை மேம்படுத்த ரூ.2,867 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த ரூ.2,867 கோடி மதிப்பில் இரண்டு ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை டெல்லியில் பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமாருடன் கையெழுத்திடப்பட்டன.
எப்போ அந்த தீர்ப்பு வந்துச்சோ அப்பவே அவர் சாப்பிடாம ஆயிட்டாரு.., VJ சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி
இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) உருவாக்கிய ஏர் இன்டிபென்டன்ட் புரொபல்ஷன் (Air Independent Propulsion) இயந்திரத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களில் எலக்ட்ரானிக் ஹெவி வெயிட் டார்பிடோவை (EHWT) இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீர்மூழ்கி கப்பல்களில் (ஏஐபி) இயந்திரத்தை பொருத்த மும்பை மசாகன் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் (Mazagon Dock Shipbuilders Limited ) நிறுவனத்துடன் சுமார் ரூ.1,990 கோடி மதிப்புள்ள முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஏஐபி தொழில்நுட்பம் பொருத்துவதன் மூலம் கடலுக்கடியில் நீண்ட காலம் இருக்க அனுமதிக்கும். வழக்கமாக டீசல் இன்ஜின் நீர்மூழ்கி கப்பல்களுக்கு தேவையான காற்றை ஸ்னார்கெல் என்ற பைப் மூலம் பெறுவதற்கு குறிப்பிட்ட தூரம் கடலில் மேற்பகுதிக்கு வர வேண்டும்.
ஆனால், இந்த ஏஐபி தொழில்நுட்பம் கடலின் மேற்பரப்பிற்கு வர வேண்டியதில்லை. அதாவது, வளிமண்டல ஆக்ஸிஜன் தேவையில்லாமல் மின்சாரத்தை உருவாக்குவதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பல்களை நீண்ட காலத்திற்கு நீரில் மூழ்க அனுமதிக்கும்.
இரண்டாவதாக, கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களில் எலக்ட்ரானிக் ஹெவி வெயிட் டார்பிடோவை (Electronic Heavy Weight Torpedo) இணைக்க பிரான்சின் கடற்படைக் குழுவுடன் ரூ.877 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நவீன டார்பிடோ ஏவுகணையில் அலுமினியம் சில்வர் ஆக்சைடு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதிவேகத்தில் சென்று எதிரிகளை தாக்க முடியும்.
இந்த டார்பிடோ இருப்பதால் வெடிக்காது. இது, பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது. மேற்சொன்ன இரண்டு ஒப்பந்தங்களும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |