VPN பயன்படுத்துபவரா நீங்கள்? ஆம் என்றால் புதிய விதிமுறைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
இந்தியாவில் புதிய VPN விதிமுறைகள் அறிமுகபடுத்தப்பட்டதை தொடர்ந்து, பிரபல நிறுவனமான Express VPN இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
பொதுவாக VPN சேவைகளை பயன்படுத்தி, நேரடியாக அக்சஸ் செய்யமுடியாத வலைதளங்கள் மற்றும் வலைத்தள சேவைகளை இந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க்(VPN) கொண்டு யூசர்கள் பயன்படுத்தி வந்தனர், அதேசமயம் யூசர்கள் இந்த VPN வசதியை பயன்படுத்தி தங்களது அடையாளங்களான டேட்டா மற்றும் IP முகவரிகளை மாஸ்க் செய்து பாதுகாத்தும் கொள்கின்றனர்.
இதனால் ஆன்லைன் மோசடி, ஹேக்கிங், பிரைவசி, அண்டர்கிரவுண்ட் வலைதளங்கள் என்று பல்வேறு இணையதள மோசடிகள் மற்றும் குற்றசம்பவங்கள் இந்தியாவில் சமீப காலங்களில் அதிகரித்து வருவதை தொடர்ந்து, VPN சேவைகளை கட்டுபாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் இந்திய அரசு புதிய விதிமுறைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடைப்பிடிக்குமாறு உத்திரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், VPN சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களது பயனர்களின் உண்மையான பெயர், IP முகவரி மற்றும் அவர்களின் விவரங்களையும், தரவுகளையும் சேமிக்கவேண்டும் என அரசு உத்திரவிட்டுள்ளது.
இந்திய அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து, தனது வாடிக்கையாளர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக VPN சேவைகளை வழங்கி வந்த பிரபல Express VPN இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்தியா சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து சேவை பிளாட்ஃபார்ம்களையும் மொத்தமாக நிறுத்திக் கொள்வதாகவும் Express VPN நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: போரில் தினமும் 200 உக்ரைனிய வீரர்கள் வரை...வெளியான அதிர்ச்சி தகவல்!
VPN சேவைகள் குறித்த இந்திய அரசின் புதிய உத்தரவானது ஜூன் 27, 2022 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.