G7 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: இந்தியாவுக்கு அழைப்பு
பிரான்சில் நடைபெறும் G7 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள இந்திய வெளியுறவு அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
G7 சந்திப்பிற்கு இந்தியாவுக்கு அழைப்பு
The Group of Seven (G7) என்பது, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த ஒரு அமைப்பாகும். அதில், ஐரோப்பிய ஒன்றியமும் பங்குவகிக்கிறது.

ஆனால், இந்தியா G7 அமைப்பில் உறுப்பு நாடு இல்லை. என்றாலும், இந்தியாவின் கூட்டாளர் நாடு என்னும் முறையில், இந்திய வெளியுறவு அமைச்சரான S. ஜெய்ஷங்கரையும் கூட்டத்தில் பங்கேற்க அழைத்துள்ளது பிரான்ஸ்.
அத்துடன், சவுதி அரேபியா, தென்கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின்போது, மேற்காசிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
அதாவது, மத்திய கிழக்கு நாடுகள் என்னும் வார்த்தைக்கு பதிலாக, சில ஊடகங்கள் மேற்காசிய நாடுகள் என குறிப்பிடுகின்றன.
அதற்குக் காரணம் என்னவென்றால், மத்திய கிழக்கு நாடுகளில் எகிப்தும் அடங்கும். எகிப்து ஒரு ஆப்பிரிக்க நாடு. ஆக, எகிப்து இல்லாத சவுதி அரேபியா, ஈரான், ஈராக், துருக்கி போன்ற நாடுகளைக் குறிப்பிட, மத்திய கிழக்கு நாடுகள் என்பதற்கு பதிலாக, மேற்காசிய நாடுகள் என குறிப்பிடுகின்றன ஊடகங்கள்.
ஆக, பிரான்சில் நடைபெறும் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் மேற்காசிய பகுதியில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பது, எண்ணெய்க்கப்பல் போக்குவரத்துக்கான வழிகளை திறப்பது தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
அத்துடன், ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை அணுகுவது குறித்தும் வெளியுறவு அமைச்சர்கள் விவாதிக்க இருக்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |