உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்..! ரிக்கி பாண்டிங் பேட்டி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை தோற்கடிப்பது மிகவும் கடினமானது என அவுஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர் வெற்றியில் இந்தியா
13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.
இதில் லீக் சுற்றுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதன்மை இடத்தில் உள்ளது.
இந்நிலையில் உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஆவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய அணி மற்றும் அதன் கேப்டன் ரோகித் சர்மா குறித்து ஐ.சி.சி-யின் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இந்திய அணியை வெல்வது கடினம்
அதில் இந்திய அணியை இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வீழ்த்துவது மிகவும் கடினமானது, இந்திய அணி வேகப்பந்து, சுழற்பந்து, டாப் ஆர்டர் பேட்டிங், மிடில் ஆர்டர் பேட்டிங் என அனைத்திலும் சிறப்பாக உள்ளது.
இந்திய அணியின் இந்த சாதகமான நிலைக்கு காரணம் அதன் கேப்டன் ரோஹித் சர்மா, களத்திற்கு உள்ளேயும், போட்டிக்கு வெளியேயும், அவர் பதற்றமின்றி நடந்து கொள்கிறார்.
தனிப்பட்ட முறையிலும் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்துவது மிகவும் கடினமானது. இந்தியாவை வீழ்த்த மற்ற அணிகள் மிகவும் போராட வேண்டியது இருக்கும்.
ஆனால் எதிரணிகள் இந்த அழுத்தத்தை எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |