போர் நிறுத்த மீறல்கள்... பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் விடுத்த இந்தியா
போர் நிறுத்த ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட சில மணி நேரங்களில், இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன.
தீவிர கண்காணிப்பில்
இந்த நிலையில், இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் மீண்டும் மீறப்பட்டதாகவும், பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
அத்துடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க ஆயுதப் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மீண்டும் மீண்டும் எல்லை மீறல்கள் நடந்தால், அவற்றைக் கடுமையாக எதிர்கொள்ள அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவின் பெரும் முயற்சி காரணமாகவே இந்தியா - பாகிஸ்தான் இடையே உடனடி போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் பெருமையாக தெரிவித்திருந்தார்.
அறிவிப்பதில் மகிழ்ச்சி
தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த விடயத்தில் உடனடி முடிவெடுத்ததற்கு நன்றி எனவும் அவர் பதிவு செய்துள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார், போர் நிறுத்த ஒப்பந்தத்தை எளிதாக்குவதில் சவுதி அரேபியாவும் துருக்கியும் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |