இந்தியா சொந்தமாக செமிகண்டக்டர் சிப்களை உருவாக்க திட்டம் - மோடி அறிவிப்பு
இந்தியா சொந்தமாக செமிகண்டக்டர் சிப்களை உருவாக்கவுள்ளதாக பிரதமர் மோடி அரெய்வித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் 79-வது சுதந்திர தின உரையில், 2025 இறுதிக்குள் "Made In India' Semiconductor Chip-கள் சந்தையில் வரவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இது கடந்த 50 முதல் 60 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டும் செயல்படுத்தப்படாத கனவை பூர்த்தி செய்யவுள்ளது.
இந்திய அரசு தற்போது Mission Mode எனப்படும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.
இந்தியா 2030 இலக்கை விட 5 ஆண்டுகள் முன்பே 50 சதவீதம் Clean Energy இலக்கை அடைந்துள்ளதாகவும், சோலார், ஹைட்ரஜன் மற்றும் அணு ஆற்றல் துறைகளில் இந்தியா தன்னிறைவை நோக்கி பயணிக்கிறது என மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், மோடி தனது உரையின்போது, ரூ.1 லட்சம் கோடி முதலீட்டின் 'விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா' எனும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தை அறிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India semiconductor chip 2025, PM Modi Independence Day speech, Made In India semiconductor chips, Mission Mode semiconductor India