சுப்மன் கில் அதிரடி! முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்போட்டியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
புதன்கிழமை ஹதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய அணி
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்ட முடிவுசெய்தது.
ICC
அதன்படி முதலி களமிறங்கிய இந்திய அணியில், சுப்மன் கில் 149 பந்துகளில் 208 ஓட்டங்கள் விளாசி அதிரடி காட்டினார். 194 ஓட்டங்களில் இருந்த கில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை எட்டினார். அவரது சதத்தில் 9 சிக்ஸர், 19 பவுண்டரிகள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, கேப்டன் ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 34 ஓட்டங்கள் அடித்தார். மேலும் சூரியகுமார் யாதவ் 31 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 28 ஓட்டங்களும் அடித்தனர். மற்ற அனைவரும் சொற்ப ஓட்டங்களை வெளியேறினர்.
50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 349 ஓட்டங்கள் குவித்தது.
நியூசிலாந்து அணி சார்பில் ஹென்றி ஷிப்லி மற்றும் டேரில் மிட்செல் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.
நியூசிலாந்து அணி
350 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் முன்வரிசை வீரர்கள் பெரிய தாககத்தை ஏற்படுத்தவில்லை. கான்வே 10 ஓட்டங்களிலும், நிக்கோலஸ் 18 ஓட்டங்களிலும், டேரில் மிட்செல் 9 ஓட்டங்களிலும் முக்கிய கட்டத்தில் வெளியேறினர்.
கேப்டன் டாம் லாத்தம் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 131 ஓட்டங்க்ளுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து, மைக்கேல் பிராஸ்வெல் மற்றும் மிட்செல் சாண்டனர் இணைந்து அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.
மைக்கேல் பிராஸ்வெல் 57 பந்துகளில் 100 ஓட்டங்கள் கடந்து இந்திய அணிக்கு ஷாக் கொடுத்தார். மிட்செல் சாண்டனரும் 38 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.
இதனால் நியூசிலாந்து வெற்றி அருகே வந்த நிலையில், முகமது சிராஜ் தனது கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
த்ரில்லான கடைசி ஓவர்
கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றிக்கு ஒரு விக்கெட் கைவசம் இருக்க, 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஷர்துல் தாக்கூர் கடைசி ஓவர் வீச, முதல் பந்தை சிக்சர் பிராஸ்வெல் சிக்சருக்கு விளாச, இரண்டாவது பந்து ஓயிடாக மாற, 3வது பந்தில் பிராஸ்வெல் ஆட்டமிழக்க இந்திய அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒரு நாள் சர்வதேச தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
பிராஸ்வல் 78 பந்துகளில் 140 ஓட்டங்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகளும், 10 சிக்சர்களும் அடங்கும்.
இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.