சிட்னி டெஸ்ட்: சுருண்டது இந்தியா! மளமளவென அவுஸ்திரேலியாவிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்த வீடியோ
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் டி-20 தொரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
இதனை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட ஜனவரி 7-ஆம் திகதி சிட்னி மைதானத்தில் தொடங்கியது.
It was a dynamite display in the field by Australia! Watch all 10 Indian wickets to fall here #AUSvIND pic.twitter.com/4I05u5eEt9
— cricket.com.au (@cricketcomau) January 9, 2021
முதல் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னங்ஸில் ஸ்மித் சதத்தால் 338 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 244 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ரோகித் சர்மா (26), ஷுப்மன் கில் (50), புஜாரா (50), ரஹானே (22), ஹனுமா விஹாரி (4), ரிஷப் பண்ட் (36), ரவிச்சந்திரன் அஸ்வின் (10), பும்ரா (0), முகமது சிராஜ் (6), நவ்தீப் சைனி (3) ஓட்டங்களில் வெளியேறினர்.
ரவீந்திர ஜடேஜா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலியா தரப்பில் அதிபட்சமாக கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Hazlewood (2), ஸ்டார்க் (1) விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
94 ஓட்டங்கள் முன்னிலையுடன் அவுஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.