அவுஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்தது இந்தியா! டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தல்... ரூ 5 கோடி பரிசு அறிவிப்பு
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 32 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த அவுஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
CHAMPIONS #TeamIndia pic.twitter.com/hintWt3MEe
— BCCI (@BCCI) January 19, 2021
இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து பிரிஸ்பேன் டெஸ்டை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ரிஷப் பந்த் நம்பமுடியாத விதத்தில் இலக்கை விரட்டி 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.
முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. தற்போது கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலிய மண்ணில் சாதனை வெற்றியை நிகழ்த்தியுள்ள இந்திய அணிக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை பிசிசிஐ அறிவித்துள்ளது.
"The BCCI has announced INR 5 Crore as team bonus"- BCCI Secretary Mr @JayShah tweets.#TeamIndia pic.twitter.com/vgntQuyu8V
— BCCI (@BCCI) January 19, 2021