இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Ai+ Smartphone வெளியீடு - ஆரம்ப விலை ரூ.4,499
இந்தியாவில் முதல் முழுமையான உள்ளூர் தயாரிப்பு ஸ்மார்ட்போன் என விளம்பரப்படுத்தப்பட்ட Ai+ Smartphone, இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது முன்னாள் Realme CEO மாதவ் சேத் நிறுவிய NxtQuantum Shift Technologies நிறுவனத்தின் தயாரிப்பு.
Pulse மற்றும் Nova 5G என இரு மாடல்களில் வெளியான இந்த ஸ்மார்ட்போன்களில், 6.7-இஞ்ச் HD+ screen, 50MP dual AI Camera, 5000mAh பேட்டரி, மற்றும் 1TB வரை மேம்படுத்தக்கூடிய மெமரி வசதி உள்ளது.
Nova 5G மொடல் 5G ஆதரவை வழங்குகிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதியும் உள்ளது.
இந்த சாதனத்தில் இந்தியாவே உருவாக்கிய முதல் இயங்குதளம் எனக் கூறப்படும் NxtQuantum OS பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய பயனாளர்களின் தரவுப் பாதுகாப்பைக் கவனிக்க உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பல பிராந்திய மொழிகள் ஆதரிக்கப்படுகின்றன.
Flipkart VP ஸ்மிருதி ரவிச்சந்திரன் கூறுகையில், “மிகவும் நம்பகமான மற்றும் அணுகக்கூடிய விலையில் வரும் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தேவை உள்ளது. Ai+ Smartphone அதனை முழுமையாக நிறைவேற்றுகிறது,” என கூறியுள்ளார்.
இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறும் பிளாஷ் சேல்களில் Flipkart-ல் கிடைக்கும். ஆரம்ப விலை Pulse ரூ.4,499 மற்றும் Nova 5G ரூ.7,499.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ai+ Smartphone India launch, India’s first sovereign smartphone, Madhav Sheth Ai+ phone, NxtQuantum OS smartphone, Made in India mobile phone, Flipkart Ai+ Smartphone sale, Ai+ Nova 5G Pulse specs price, Affordable 5G phones under 8000 India