சச்சின் தலைமையில் முதல் மாஸ்டர்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற இந்திய அணி! நெகிழ்ச்சி பதிவு
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
சிம்மோன்ஸ் 57
ராய்பூரில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடந்தது.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 148 ஓட்டங்கள் சேர்த்தது. சிம்மோன்ஸ் 57 (41) ஓட்டங்களும், டிவைன் ஸ்மித் 45 (35) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் 17.1 ஓவரில் 149 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தியா மாஸ்டர்ஸ் சாம்பியன்
அம்பதி ராயுடு 50 பந்துகளில் 74 ஓட்டங்களும், சச்சின் டெண்டுல்கர் 18 பந்துகளில் 25 ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா மாஸ்டர்ஸ், முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அணித்தலைவர் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட பதிவில், "பார்வையாளர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் எனது இந்தியா மாஸ்டர்ஸ் அணியினர் உட்பட இந்த அனுபவத்தை மறக்க முடியாததாக மாற்றிய அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்றார்.
India Masters - The First - Ever 𝐈𝐌𝐋𝐓𝟐𝟎 𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧𝐬! 🏆
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 16, 2025
They conquer the Grand Finale, defeating #WestIndiesMasters by 6️⃣ wickets! An incredible match & an unforgettable season - #IMLT20 Season 1 belongs to #IndiaMasters! 🙌
#TheBaapsOfCricket pic.twitter.com/LOkAmdHp4v
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |