80km வேகத்தில் புயல் காற்று.. சென்னைக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் உருவாக உள்ள மிக்ஜாம் புயலால் சென்னையில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காற்று
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
மேலும் நாளை(டிச.2) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் (டிச.3) வங்கக்கடலில் புயலாக வலுப்பெற உள்ளது.
மேலும் தெற்கு ஆந்திரம் - வடதமிழகத்தின் அருகே வரும் டிச4-ம் தேதி புயல் வந்தடைகிறது.
இதையடுத்து, ஆந்திரத்தின் நெல்லூருக்கும்-மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிச5-ம் தேதி காலை புயல் கரையைக் கடக்கிறது.
முன்னதாக வடதமிழகம்-மசூலிப்பட்டினத்திற்கு இடையே டிச.4-ம் தேதி மாலை கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 4ம் தேதி மாலை, 60-70km வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் என்றும், அவ்வபோது, 80 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக தமிழகத்தில் டிச 5-ம் தேதி வரை கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று ந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |