பிரித்தானியாவின் முப்படை தளபதியை சந்தித்த இந்திய இராணுவ தளபதி! என்ன காரணம் தெரியுமா?
பிரித்தானியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ தலைமை தளபதி, அந்நாட்டு முப்படைத் தளபதியை சந்தித்து பேசினார்.
பிட்டத்தானியாவுக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பிரித்தானியாவின் முப்படைத் தளபதி நிகோலஸ் கார்ட்டரை நேற்று சந்தித்து பேசினார்.
இது குறித்து இந்திய இராணுவம் வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பு குறித்தும் அதை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாகவும் அவா்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்டிருந்தது.
முன்னதாக, பிரித்தானியா ராணுவம் தரப்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை தலைமை தளபதி எம்.எம்.நரவணே ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் பிரித்தானியா ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தை முடித்த பின்பு, அவர் புதன்கிழமை இத்தாலி செல்கிறார்.
அங்கு இந்திய ராணுவ நினைவகத்தை அவா் திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முப்படைத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.