இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்து பயணம் - பின்னணி என்ன?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜெய்சங்கர்
இங்கிலாந்து பயணம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நேற்று லண்டனுக்கு சென்றடைந்த அவர், இங்கிலாந்து உள்துறை அமைச்சர் வெட் கூப்பரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தீவிரவாதம், ஆள்கடத்தல் உள்ளிட்டவற்றை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ், இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லேமி ஆகியோரை சந்தித்து உரையாடினார்.
கீர் ஸ்டார்மருடன் சந்திப்பு
முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு, பொருளாதார ஒப்பந்தம் மற்றும் மக்கள் ஒருவருடன் ஒருவர் பரிமாற்றங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை முன்னெடுப்பது குறித்து விவாதிப்பதிக்கப்பட்டது.
Delighted to call on Prime Minister @Keir_Starmer at @10DowningStreet today.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 4, 2025
Conveyed the warm greetings of PM @narendramodi.
Discussed taking forward our bilateral, economic cooperation and enhancing people to people exchanges.
PM Starmer also shared UK’s perspective on… pic.twitter.com/KnVuirFMLA
உக்ரைன் போரில் இங்கிலாந்தின் அணுகுமுறை குறித்து ஸ்டார்மர், பகிர்ந்து கொண்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, லண்டனை தளமாகக் கொண்ட முன்னணி சிந்தனைக் குழுவான சாத்தம் ஹவுஸில் "உலகில் இந்தியாவின் எழுச்சி மற்றும் பங்கு" என்ற தலைப்பில் நடைபெறும் அமர்வில் ஜெய்சங்கர் உரையாற்ற உள்ளார்.
மேலும், பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டரில் புதிதாக 2 இந்திய தூதரகங்களை ஜெய்சங்கர் திறந்து வைக்க உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |