உடைந்த ராணுவ ஓடுபாதைகள் தான் வெற்றியா? ஐ.நாவில் பாகிஸ்தானை கேலி செய்த இந்தியா
ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமரின் கூற்றை இந்தியா கேலி செய்து இருப்பது அதிக கவனத்தை பெற்றுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை குறிப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர்
சனிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற விவாத கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆபரேஷன் சிந்தூர் குறித்து குறிப்பிட்டு பேசினார்.
அதில், இந்தியா தங்கள் நாட்டின் மீது காரணமற்ற கோபத்தை வெளி காட்டுவதாகவும், பாகிஸ்தான் ராணுவம் வீரம் மற்றும் விவேகத்துடன் இந்தியாவின் தாக்குதலை முறியடித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் நாங்கள் போரில் வெற்றி பெற்று விட்டோம், இப்போது பாகிஸ்தான் அமைதியை வெல்ல முயற்சித்து வருகிறது என்று குறிப்பிட்டு பேசினார்.
இந்தியா பதிலடி
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உரைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய தூதர் பெட்டல் கஹ்லோட் பல முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
அதில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உரை அபத்தமான நாடகங்களாக இருப்பதாகவும், பயங்கரவாதத்தை போற்றுவதாகவும் இருப்பதாக சாடினார்.
அத்துடன் அமெரிக்காவின் கூட்டாளி என்று பாசாங்கு செய்து விட்டு ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அளித்து வந்ததாகவும் கஹ்லோட் சுட்டிக்காட்டினார்.
ஷெபாஸ் ஷெரீப் போரில் வெற்றி என பேசியதை குறிப்பிட்டு பேசிய கஹ்லோட், பாகிஸ்தான் வெற்றி என அறிவித்த சில நாட்களில் இந்தியா ராணுவத்திடம் போர் நிறுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நேரடியாக முன் வைத்ததையும் கஹ்லோட் அம்பலப்படுத்தினார்.
From @petal_gahlot to @CMShehbaz, I hope there’s an ambulance handy at the UNGA. pic.twitter.com/ZrSvJYFCvp
— Shiv Aroor (@ShivAroor) September 27, 2025
மேலும், பாகிஸ்தான் ராணுவத்தின் உள் கட்டமைப்பில் ஏற்பட்ட சேதங்களை குறிப்பிட்ட கஹ்லோட், உடைந்த ஓடுபாதைகளும், இராணுவ கட்டிடங்களும் புகைப்பட ஆதாரமாக இருப்பதாக பாகிஸ்தான் எழுப்பிய வெற்றி என்ற கூற்றை கேள்வியெழுப்பினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |