2 பிரபல இந்திய ரவுடிகள் வெளிநாட்டில் கைது: இந்தியாவுக்கு நாடு கடத்த திட்டம்!
இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகளால் தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகள் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு இந்திய குற்றவாளிகள் கைது
வெளிநாடுகளில் இருந்தபடி பல்வேறு குற்றச் செயல்களை செய்து வந்த இரண்டு இந்திய ரவுடிகளும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானா காவல்துறை மற்றும் இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகளின் கூட்டு முயற்சிகளுக்கு பிறகு இந்த கைது நடவடிக்கை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜியாவில் வெங்கடேஷ் கார்க் என்ற ரவுடியும், அமெரிக்காவில் பானு ராணா என்ற ரவுடியும் கைது செய்துள்ளனர்.
இதில் பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் பானு ராணா நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு பல்வேறு குற்ற வழக்குகளை எதிர்கொள்ள உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |