சமோசா விலை ஏறியதால் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம்!
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் சமோசா விலை உயர்வால் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ச்சியாக ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம் ஏற்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் நகரில் அமர்கந்தக் என்ற பகுதியில் பஜ்ரு ஜெய்ஸ்வால் என்பவர் தனது 2 நண்பர்களுடன் சமோசா வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அந்த கடைக்காரர் கஞ்சன் சாகு, பணவீக்கத்தினால் சமோசாவின் விலை உயர்ந்து விட்டது என கூறியுள்ளார். இதனால், 2 சமோசா ரூ.15-க்கு பதிலாக ரூ.20-க்கு விற்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்க மறுத்து ஜெய்ஸ்வால் வாக்குவாதம் செய்துள்ளார். இதுபற்றி கடைக்காரர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸார் ஜெய்ஸ்வாலிடம் விசாரித்து சென்றனர். இதன் தொடர்ச்சியாக மறுநாள் கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெய்ஸ்வால், திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்து உள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த அவரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
Madhya Pradesh | Dispute over price of Samosa leads to death of a man in Anuppur
— ANI (@ANI) July 27, 2021
Probe ordered into the matter. Eyewitness has claimed that Bajru Jaiswal had allegedly poured petrol on him & set himself afire. He was referred to hospital where he died: Ashish Bharande, SDOP pic.twitter.com/hSJz82hHXx