உலக கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி! இந்தியாவுடன் மோதும் நெதர்லாந்து
உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதும் இப்போட்டியில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
10 அணிகள் கலந்து கொண்டு தொடங்கிய இப்போட்டித் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் நான்கு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதுவரையிலும் விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா அணி, இன்றைய போட்டியிலும் நெதர்லாந்தை வென்று புதிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
எனினும் ஆறுதல் வெற்றி பெற நெதர்லாந்து அணியும் போராடும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.