26 எதிர்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் சூட்டல்
26 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்க கூட்டணி(இந்தியா) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட்டம்
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 நாட்களாக நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், கூட்டணிக்கான புதிய பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
26 கட்சிகளை உள்ளடக்கிய இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்க கூட்டணி(இந்தியா), Indian National Developmental Inclusive Alliance (INDIA) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
''हम मुंबई में फिर मिलने जा रहे हैं, वहां हम चर्चा के बाद समन्वयकों के नाम का ऐलान करेंगे''
— News24 (@news24tvchannel) July 18, 2023
◆ बेंगलुरु में कांग्रेस अध्यक्ष @kharge ने दी जानकारी #OppositionMeeting #OppositionMeet #BengaluruOppositionMeet #INDIA | Mallikarjun Kharge pic.twitter.com/QCFlfCG5gG
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும், எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க 11 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்காக டெல்லியில் ஒரு செயலகம் ஒன்றும் அமைக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால்
இந்நிலையில், இன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நல்ல முறையில் ஆக்கப்பூர்வமாக இருந்தது, இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியால் NDA (பாஜக தலைமையிலான கூட்டணி) எங்களுடைய “இந்தியா”வை வீழ்த்த முடியுமா என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, இந்திய நாட்டின் இருவேறு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் இது என்றும், ஒற்றுமை என்னும் இந்தியாவுக்கும் மோடிக்கும் இடையிலான போராட்டம் இது என்றும் தெரிவித்தார்.
#WATCH | This was our second successful meeting today. The country is our family and we are fighting together to save our family. The next meeting of this alliance will be in Mumbai: Former Maharashtra CM Uddhav Thackeray in Bengaluru pic.twitter.com/LpJSAqMjqT
— ANI (@ANI) July 18, 2023
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 9 ஆண்டுகளில் பெரும்பாலான அரசு துறைகள் தனியார்மயம் ஆக்கப்பட்டு வருகிறது. நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள் என அனைவரும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர் என தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசிய போது, பாட்னாவில் முதல் கூட்டம் நடைபெற்ற போது திமுக-வை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, 2வது கூட்டத்தின் போதும் சோதனை நடைபெற்றது. எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற கூட்டணி அவசியம் என்று வலியுறுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Mr @RahulGandhi :
— Supriya Bhardwaj (@Supriya23bh) July 17, 2023
A United Opposition - To protect our Democracy, To Safeguard India's Constitution ! #OppositionMeeting pic.twitter.com/Kr7Bjvw4vj