இரவிலும் போர் விமானங்கள் தரையிறங்கும் - இந்தியாவில் உள்ள ஒரே சாலை எங்கே தெரியுமா?
இரவிலும் போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் இந்தியாவில் ஒரு சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கங்கா விரைவு சாலை
போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை குறைக்கும் வகையில், பல்வேறு விரைவு சாலைகளை இந்திய நெடுஞ்சாலை துறை உருவாக்கி வருகிறது.

தற்போது, உத்திரப்பிரதேச மாநிலத்தில், மீரட்டை பிரயாக்ராஜுடன் இணைக்கும் 594 கிலோமீட்டர் நீளமுள்ள விரைவு சாலை ரூ.36,200 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கங்கா விரைவு சாலை பயன்பாட்டிற்கு வந்த பின்னர், மேற்கு மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்திற்கு பயண நேரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், இந்த விரைவு சாலை பயணிகளின் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் ராணுவ போர் விமானங்களை தரையிறக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் ஏற்கனேவே 3 விரைவு சாலைகளில் போர் விமானங்களை தரையிறக்கும் வசதி உள்ளது. ஆனால் இந்த சாலைகளில் பகல் நேரங்களில் மட்டுமே போர் விமானங்கள் தரையிறங்க முடியும்.

இந்த கங்கா விரைவு சாலையில் இரவு நேரத்திலும் போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டிலே இரவிலும் போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரே சாலை இதுவாகும்.
ஏற்கனேவே, ரஃபேல், மிராஜ் மற்றும் ஜாகுவார் போன்ற போர் விமானங்களை இந்த சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கம் செய்து விமானப்படை சோதனை செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |