இந்தியாவில் புதிய BrahMos உற்பத்தி மையம்: ஆண்டுக்கு 150 ஏவுகணைகள் தயாரிக்கும் இலக்கு
இந்தியாவின் பாதுகாப்புத்துறை வளர்ச்சியில் முக்கியமான நிகழ்வு இன்று இடம் பெற்றது.
BrahMos ஏவுகணை உற்பத்திக்கான புதிய ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையம் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் திறக்கப்பட்டுள்ளது.
இதனை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரிமோட் வழியாக திறந்துவைத்தார்.
இந்த உற்பத்தி மையம், உத்தரப்பிரதேச பாதுகாப்புத்துறை தொழில்துறை வழித்தடத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் லக்னோ, கான்பூர், அலிகர், ஆக்ரா, ஜான்சி மற்றும் சித்ரகூட் ஆகிய ஆறு முக்கிய இடங்கள் அடங்குகின்றன.
பிரம்மோஸ் ஏவுகணை
பிரம்மோஸ் (BrahMos) என்பது நிலம், கடல் மற்றும் வான்வழிகளில் இருந்து ஏவக்கூடிய மல்டி-ரோல் சூப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.
இது அனைத்து வானிலை மற்றும் இரவு-பகல் நேரங்களிலும் செயல்படக்கூடியது. இதுவரை 100க்கும் மேற்பட்ட வெற்றிகரமான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
லக்னோ உற்பத்தி மையத்தின் சிறப்புகள்
- முதற்கட்டமாக, ஆண்டுக்கு 80 முதல் 100 ஏவுகணைகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது
- அடுத்த கட்டத்தில், 100 முதல் 150 நவீன ‘நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ பிரமாஸ் ஏவுகணைகள் தயாரிக்க முடியும்
- புதிய NG ஏவுகணை வேரியன்ட் இலேசாக (1,290 கிலோ) இருக்கும், Su-30MKI போர் விமானங்களில் இதன் மூன்று ஏவுகணைகளை ஏற்றமுடியும்.
- எளிமையான “fire and forget” வழிகாட்டி முறை மூலம் குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது.
- அதிகபட்ச வேகம்: Mach 2.8 (சுமார் 3,430 கிமீ/மணி)
- ரேஞ்ச்: 290–400 கிமீ
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- மையம் உருவாக்கம்: ரூ.300 கோடி
- பரப்பளவு: 80 ஹெக்டேர் - மாநில அரசு இலவசமாக வழங்கியது
- 2021ல் அடிக்கல் நாட்டப்பட்டது, 3.5 ஆண்டுகளில் பூர்த்திசெய்யப்பட்டது.
- டிடிஐஎஸ் சோதனை மையம் மற்றும் மூலப்பொருள் தொழில்நுட்ப மையமும் இதன் பகுதிகள் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BrahMos Production India, Lucknow BrahMos Unit, Rajnath Singh BrahMos Launch, Indian Defence Corridor UP, BrahMos Su-30 MKI Integration, BrahMos missile production, BrahMos Lucknow facility, BrahMos NG missile, India missile manufacturing, Rajnath Singh BrahMos, Indian defence corridor, BrahMos Aerospace unit, Supersonic cruise missile India, BrahMos missile testing Lucknow, BrahMos DRDO Russia joint venture