ஏவுகணைகள் தயாரிப்பில் தனியார் துறைக்கு வாய்ப்பு: இந்திய பாதுகாப்பு அமைச்சின் புதிய நடவடிக்கை
ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பில் தனியார் துறைக்கு வாய்ப்பு வழங்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு துறையில் "ஆத்மநிர்பர் பாரத்" திட்டத்தை முன்னெடுத்து, ஏவுகணைகள், வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பை தனியார் நிறுவனங்களுக்கு திறக்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நீண்டகால போர்களில் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதற்காகவும், வெளிநாட்டு ஆதாரங்களைப் பொருட்படுத்தாமல் செயல்படவேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, Revenue Procurement Manual-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் வெடிகுண்டுகள் தயாரிக்க முன்தைய அனுமதி தேவையில்லை. இதுவரை, Munitions India Limited என்ற அரசு நிறுவனத்திடம் NOC பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.
தற்போது, 105mm, 130mm, 150mm துப்பாக்கி வெடிகுண்டுகள், பினாகா ஏவுகணைகள், 1000 பவுண்டு குண்டுகள், மோட்டார் குண்டுகள், கையெறிகுண்டுகள் மற்றும் சிறிய அளவிலான வெடிகுண்டுகள் ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் தயாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்தியா BrahMos, Pralay மற்றும் Shaurya போன்ற நீண்டதூர ஏவுகணைகள் அதிக அளவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
தற்போது Bharat Dynamics Limited மற்றும் Bharat Electronics Limited ஆகியவை மட்டுமே Akash, Astra போன்ற ஏவுகணைகளை DRDO-வின் கீழ் தயாரிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |