3வது ஒரு நாள் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனில் 4 வீரர்கள் மாற்றம்... ஓரங்கட்டப்பட்ட அஸ்வின்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் 4 வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றன.
முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்று ஒரு நாள் தொடரையும் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றிவிட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று கேப் டவுனில் தொடங்கியது.
ஒரு நாள் தொடரை இழந்துவிட்டாலும் ஒயிட் வாஷை தவிர்க்க இந்திய அணி போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்நிலையில், 3வது ஒரு நாள் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணி 4 மாற்றங்கள் செய்துள்ளது.
அஸ்வின், ஷர்துல், வெங்கடேஷ் ஐயர் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், பிரசித் கிருஷ்ணா மற்றும் தீபக் சாஹருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Four changes for #TeamIndia in the final ODI.
— BCCI (@BCCI) January 23, 2022
Live - https://t.co/dUN5jhH06v #SAvIND pic.twitter.com/Ml02ISfjSE
3வது ஒரு நாள் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன்:
- கே.எல்.ராகுல்(கேப்டன்)
- ஷிகர் தவான்
- விராட் கோலி
- ரிஷப் பந்த்
- சூர்யகுமார் யாதவ்
- ஷ்ரேயாஸ் ஐயர்
- ஜெயந்த் யாதவ்
- பிரசித் கிருஷ்ணா
- தீபக் சாஹர்
- ஜஸ்பிரித் பும்ரா
- யுஸ்வேந்திர சாஹல்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017