இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது... விரிவான பின்னணி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த மோதல் அணு ஆயுதப் போராக மாறக்கூடும் என்ற அச்சம் இருந்தது.
இருதரப்பு ஒப்பந்தங்கள்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் பரவிய நிலையில், அந்த பேச்சுக்கள் அனைத்தையும் இந்தியா மறுத்தது.
இந்தச் சூழலில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் அணுசக்தி நிறுவல்களைத் தாக்குவதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை எவ்வாறு நிறுவியுள்ளன என்பதைப் புரிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கும்.
அணு ஆயுத நாடுகள் என்ற அந்தஸ்தை இந்தியாவும் பாகிஸ்தானும் அறிவித்ததிலிருந்து, அவை ஒருவருக்கொருவர் தாக்கும் தூரத்தில் உள்ள இரண்டு அணுசக்தி நாடுகளாகவே பார்க்கப்படுகிறது.
எந்தவொரு பேரழிவு விளைவுகளையும் தவிர்க்க, இரு நாடுகளும் தங்கள் அணுசக்தி அமைப்புகள் குறித்து ஒருவருக்கொருவர் தெரிவிக்க வழிமுறைகளை அமைத்துள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அணுசக்தி அபாயங்களைக் குறைப்பதற்கு இரண்டு இருதரப்பு ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பரஸ்பர அணுசக்தி அமைப்புகள் பற்றிய வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.
இதில் அணுசக்தி அமைப்புகள் மற்றும் வசதிகள் மீதான தாக்குதலைத் தடை செய்வதற்கான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தமானது 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்கும் இடையே கையெழுத்தானது.
இதனையடுத்து இரு நாடுகளின் பாராளுமன்றங்களும் அதை அங்கீகரித்த பிறகு, இந்த ஒப்பந்தம் 1991 ஜனவரி 27 அன்று அமுலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குவதையோ அல்லது மூன்றாம் நாடுகளுக்கு உதவுவதையோ தடை செய்கிறது.
அணுசக்தி நெருக்கடிகள்
லாகூர் புரிந்துணர்வு ஒப்பந்தம்: 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூரில் அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் இடையே நடந்த அமைதி உச்சிமாநாட்டில் லாகூர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
குறிப்பாக 1998 ஆம் ஆண்டு இரண்டு தெற்காசிய நாடுகளும் நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்குப் பிறகு, அணுசக்தி அபாயங்களை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அங்கீகரித்தது.
மட்டுமின்றி, CBMகள் மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி, இரு தரப்பினரும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் குறித்து ஒருவருக்கொருவர் தெரிவிக்கவும், நெருக்கடிகளின் போது தவறான புரிதல்களைத் தவிர்க்க தகவல் தொடர்பு வழிகளை நிறுவவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதியளித்தது.
இதனால் தற்செயலான அணுசக்தி நெருக்கடிகளைத் தவிர்க்க முடியும். லாகூர் ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பினரும் தங்கள் வெளிவிவகார அமைச்சர்கள் தரப்பில் அவ்வப்போது சந்தித்து அணுசக்தி தொடர்பான பிரச்சினைகள் உட்பட கவலைக்குரிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று முடிவு செய்தனர்.
இந்த இரு முதன்மையான ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, 2005 ஆம் ஆண்டு கையெழுத்தான பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைக்கான முன் அறிவிப்பு தொடர்பான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் கொண்டுள்ளன.
அத்துடன், 2007 ஆம் ஆண்டில், அணு ஆயுத விபத்துக்களால் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |