பல வருட காத்திருப்பு! பாகிஸ்தான் வீரர்களுடன் ஒன்றாக நடந்து வந்த இந்திய வீரர்கள்: மிகவும் அரிதான காட்சி
உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், வீடியோ ஒன்று இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் பலரால மிகவும் எதிர்பார்க்கும் போட்டி என்றால் அது இந்தியா-பாகிஸ்தான் போட்டி தான், அந்தளவிற்கு இந்த போட்டி ஒரு பிரம்மாண்டமாக இருக்கும். ஆட்டத்தில் அனல் பறக்கும், ஒவ்வொரு பந்துக்கும் ரசிகர்களின் ஆரவாரம் எதிரொலிக்கும்.
இது ஒரு போட்டியாக மட்டுமின்றி, பல விஷயங்கள் இதில் பார்க்கப்படும். அப்படிப்பட்ட இந்த போட்டியில் நாம் தோற்றுவிடக் கூடாது என்பதில் இந்தியா-பாகிஸ்தான் இரு அணிகளுமே தீவிரமாக இருக்கிறது.
Pakistam and India team reached ICC cricket academy for training session before match....#Pakistan #PAKvIND #ICCT20WorldCup #T20WorldCup #INDvPAK #IndvsPak #PakistanZindabad pic.twitter.com/rkqdq8jR2L
— Qadir Khawaja (@iamqadirkhawaja) October 23, 2021
ஐசிசி உலகக்கோப்பை போட்டியை பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. ஆனால் இந்த முறை அந்த வரலாற்றை நாங்கள் மாற்றும்வோம் என்று பாகிஸ்தான் அணி சவால்விட்டுள்ளது.
இந்நிலையில், இரு அணிகள் வீரர்களும் பயிற்சிக்காக ஒன்றாக நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.இது போன்று மிகப் பெரிய ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்வதால், இது போன்று பார்ப்பது எல்லாம் மிகவும் அரிதான காட்சியாக இணையவாசிகளால் பகிரப்பட்டு வருகிறது.
T20 WC: India and Pakistan players walk in together for training on eve of opening battle#WCT20 #INDvPAK pic.twitter.com/eND61FSGIi
— SMIT ⚡ (@smitd30) October 23, 2021