சைகை மொழிப் போரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
சைகை மொழிப் போரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ளது.
ஆசிய கிண்ணம் 2025 போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 ஆட்டம் வெறும் கிரிக்கெட் போட்டியாக இல்லாமல், இரு நாடுகளுக்கு இடையேயான சைகை மொழி (Sign Language) போராக மாறியது.
மே மாதத்தில் நடந்த Operation Sindoor என்ற இராணுவ நடவடிக்கையில், இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை அழித்து, 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது.
இதைப் பின்னணியாகக் கொண்டு, கிரிக்கெட் மைதானத்திலும் இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் கோபத்தை தூண்டும்படியான சைகைகளுக்கு பதிலளித்தனர்.
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப், இந்திய விமானங்களை வீழ்த்தியதாகக் கூறும் சைகையை காட்டினார்.
அதற்கு பதிலாக, இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், விமானம் விழும் சைகையை காட்டி சமூக வலைத்தளங்களில் வைரலானார்.
பாகிஸ்தான் பேட்டர் சாஹிப் சாதா ஃபர்ஹான், தனது பேட்டை AK-47 துப்பாக்கியை போல பிடித்து, இந்திய வீரர்களை நோக்கி சுடுவது போல் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இது பாகிஸ்தானின் முஜாஹித் மனப்பான்மையை பிரபலிக்கிறது என விமர்சிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Asia Cup 2025, India vs Pakistan, India Pakistan Sign language war, India Pakistan war, India Pakistan Cricket