இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டி! தேதி மாற்றப்பட்டது ஏன்?
உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கிவிட்டாலே கிரிக்கெட் ரசிகர்களிடையே எப்போதும் கொண்டாட்டம் தான்.
இந்த வருடம் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி 13வது ஒருநாள் உலகக்கோப்பை இந்தியாவில் தொடங்கவுள்ளது.
ஒரு உலகக்கோப்பை நடக்கிறது என்றால் சில மாதங்களுக்கு முன்பாகவே டிக்கெட் விற்பனை தொடங்கி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிடும்.
ஆனால் இந்த வருட உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியிட்டு அது திரும்ப பெறப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் அதே தேதியில் நவராத்திரி கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதனால் நெருக்கடி அதிகமாகவும் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த போட்டி அக்டோபர் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற இருந்த போட்டி அக்டோபர் 10ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இந்த முடிவு ஐசிசி மற்றும் பிசிசிஐ சேர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தோடு கலந்தாலோசித்து அவர்களின் ஒப்புதலுடன் இது மாற்றியமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாற்றப்பட்ட அட்டவணை முழமையாக வெளியான பிறகே டிக்கெட் விற்பனை தொடங்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.