நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் திரையுலக பிரபலங்கள் - யாரெல்லாம் தெரியுமா?
வருகிற 19 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் திரையுலக பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.
2024 நாடாளுமன்ற தேர்தல்
2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் திரையுலகை சேர்ந்த சில நட்சத்திரங்கள் கட்சி ரீதியாகவும் சுயேட்சையாகவும் போட்டியிடவுள்ளனர்.
அந்தவகையில் தற்போது பங்கேற்கவுள்ள திரைபிரபலங்களின் பெயர் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
களமிறங்கும் திரை பிரபலங்கள்
ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார் பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் நாடாளுமன்ற தேர்தலில் களம் காண்பது இதுவே முதல் முறை.
விஜய பிரபாகரன்
மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் தான் விஜய பிரபாகரன். இவர் சினிமாவில் பிரபலமாக இல்லை என்றாலும் என் உயிர் தோழா என்ற பாடலின் மூலம் திரையில் தோன்றினார்.
விஜய் வசந்த்
கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யும் நடிகருமான விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். இவர் நாடோடிகள், சென்னை 28, சென்னை 28 இரண்டாம் பாகம் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மன்சூர் அலி கான்
சுயேட்சை வேட்பாளராக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மன்சூர் அலி கான் போட்டியிடுகிறார். கடந்த முறை தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.
தங்கர் பச்சான்
பாமக சார்பில் கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இவர் அழகி, சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி, களவாடிய பொழுதுகள் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
களஞ்சியம்
நாம் தமிழர் கட்சி சார்பாக விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் களஞ்சியம் போட்டியிடுகிறார். இவர் பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு மற்றும் முந்திரிக்காடு போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக திமுகவுடன் சமரசம் செய்து அவர்களிடம் கூட்டிணி வைத்துள்ளார்.
விஜய்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பார் என கேள்வி எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |