ரூ.1500 கோடி மதிப்பில் Meteor ஏவுகணை: துல்லியமாக இலக்கை தாக்கும்
இந்திய விமானப்படையின் சக்தியை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 1500 கோடி மதிப்பில் மீட்டியோர் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.1500 கோடிக்கு ஏவுகணை வாங்க திட்டம்
இந்திய விமானப்படையில்(IAF) முன்னணி போர் விமானமாக உள்ள ரபேல் போர் விமானங்களின் போர் திறனை அதிகப்படுத்தும் நோக்கில் ரூ. 1500 கோடி மதிப்பில் மீட்டியோர்(Meteor) ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

ரூ. 1500 கோடி மதிப்பிலான இந்த திட்டம் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னணி முன்மொழிவில் உள்ளது.
மேலும் இந்த திட்டம் விரைவில் நடைபெற இருக்கும் பாதுகாப்பு துறை உயர்மட்ட கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏவுகணை திட்டம் ரஃபேல் போர் விமானத்தின் தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீட்டியோர் ஏவுகணை

ஐரோப்பாவின் MBDA நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த மீட்டியோர் ஏவுகணை சுமார் 200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.
2016 ஆண்டே பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்கும் போதே இந்த அதிநவீன மீட்டியோர் ஏவுகணையை இந்தியா ஆர்டர் செய்து இருந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்திய கடற்படைக்கு புதிதாக வரவுள்ள 26 ரஃபேல் போர் விமானங்களை தொடர்ந்து இந்த மீட்டியோர் ஏவுகணைகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        