சீக்கிய பிரிவினைவாத தலைவரை கொல்ல திட்டம்: இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
அமெரிக்க மண்ணில் வைத்து சீக்கிய பிரிவினைவாத தலைவரை இந்தியா கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
கனடா-இந்தியா மோதல்
கனடாவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நேரடி குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்ததுடன், இதனால் வெடித்த சர்ச்சையின் விளைவாக இருநாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக் கொண்டனர்.
மேலும் இந்த மோதலின் விளைவாக இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
அமெரிக்கா எச்சரிக்கை
இந்நிலையில் அமெரிக்க மண்ணில் வைத்து சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வாண்ட் சிங்கை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா தகவல் வெளீயிட்டுள்ளது.
மேலும் இதற்கான திட்டம் தீட்டப்படுவதாகவும் குறிப்பிட்டு இந்தியாவுக்கு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு: கனடா ஆதாரத்தைக் கொடுத்தால் விசாரிக்க தயார்! இந்திய வெளியுறவு அமைச்சர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |