அமெரிக்கா மீது இந்தியா பதில் வரி திட்டம்: WTO-வில் அறிவிப்பு
ட்ரம்ப்பின் வரிவிதிப்பிற்கு பதிலடியாக அமெரிக்கா மீது அதற்கு இணையான வரியை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா இந்தியாவின் வாகன உதிரி பாகங்கள் மற்றும் கார்களுக்கு 25% வரி விதித்ததற்கு பதிலடி நடவடிக்கையாக, இந்தியா சில அமெரிக்க தயாரிப்புகளுக்கு மேலதிக சுங்க வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் பற்றி உலக வர்த்தக அமைப்பிற்கு (WTO) இந்தியா ஜூலை 4, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வரிகள் மூலம் இந்தியாவுக்கு ஏற்படும் வருமான இழப்பு $723.75 மில்லியன் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கேற்ப பதில் வரிகள் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
$2.89 பில்லியன் இந்திய ஏற்றுமதிகள் பாதிப்பு
அமெரிக்கா விதித்த இந்த புதிய வரிகள், ஆண்டுக்கு $2.89 பில்லியன் மதிப்புள்ள இந்திய வாகன மற்றும் உதிரிபாக ஏற்றுமதிகளைப் பாதிக்கிறது. இது WTO விதிமுறைகளுக்கு முரணாகும் என்று இந்தியா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா இதுவரை இந்த நடவடிக்கையை WTO-வுக்கு முறையாக அறிவிக்கவில்லை என்றும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டாவது வர்த்தக மோதல்
இது கடந்த மாதம் இந்தியா அமெரிக்கா மீது அறிவித்த இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு விதித்த பதில் வரிக்குப் பிறகு இரண்டாவது பதிலடி நடவடிக்கையாகும். இந்நிலையில், இருநாடுகளும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
WTO ஒப்பந்தங்களை மீறுவோருக்கு இந்தியா கடுமையாக பதிலளிக்கும் என்பது தற்சமய அரசு நிலைப்பாடாகும்.

பிரித்தானிய விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கான சிறப்பு வாய்ப்பு: இந்த 10 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |