ட்ரம்ப்பின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.2200 கோடி நிவாரணம் - இந்தியா திட்டம்
ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரிகளால் பாதிக்கப்பட்ட இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ. 2200 கோடி நிவாரண தொகுப்பை இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக பதற்றம் அதிகரிக்கின்ற நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
இதனால் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி துறைகள் (துணி, நகை, பொறியியல் உபகரணங்கள்) பெரும் பாதிப்பை சந்திக்கின்றன.
இந்த சூழ்நிலையில், இந்திய அரசு ரூ.2,200 கோடி நிவாரண திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிவாரணத் திட்டம், பிப்ரவரி மாத மத்திய பட்ஜெட்டில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியை அடிப்படியாகக் கொண்டது.
வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம், ஏற்றுமதியாளர்களுக்கு அடமானம் இல்லாத கடன்கள், குறைந்த வட்டி விகிதம் கொண்ட நிதி உதவிகள் போன்ற பல்வேறு ஆதரவு திட்டங்களை முன்மொழிந்துள்ளது.
இந்த திட்டம் விரைவில் மத்திய அமைச்சரவையில் பரிசீலிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வரி ஆசியாவில் மிக கடுமையான வரியாக கருதப்படுகிறது. இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் பங்கஜ் சதா, "அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் பொருட்கள் 30 சதவீதம் மதிப்பிழப்பை சந்திக்கின்றன. குறைந்தபட்சம் பாதி இழப்பை அரசு ஏற்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ஏற்றுமதியாளர்கள், அமெரிக்க வருமானத்தை ரூபாயில் மாற்றும்போது 15 சதவீதம் குறைந்த மதிப்பில் மற்ற அனுமதி வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India exporter relief package 2025, Trump 50% tariff impact India, Rs2200 crore aid for exporters, India-US trade tensions 2025, Indian textile export losses, Engineering Export Promotion Council, RBI currency conversion relief, Modi government trade support, India budget export subsidies, US tariffs on Indian goods