இனி டோல்கேட்டில் நிற்க வேண்டாம்; FasTag தேவை இல்லை - அரசின் அசத்தல் திட்டம்

India
By Karthikraja Apr 16, 2025 07:44 AM GMT
Report

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக இந்தியா முழுவதும் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

GPS மூலம் சுங்க கட்டணம்

பல சுங்க சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிநிலை இருக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், பாஸ்டேக் நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 

tollgate india

இதனால் பயணிகள் காத்திருக்கும் நேரம் குறைந்தது. ஆனாலும் சில வினாடிகள் காத்திருக்கும் நிலை இருந்தது. 

fastag

தற்போது ஒரு நொடி கூட காத்திருக்க தேவை இல்லாதது போல், GPS மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

எப்படி செயல்படும்?

இந்த புதிய முறையில், செயற்கைக்கோள் உதவியுடன், மேம்பட்ட ANPR கேமராக்கள் மற்றும் வாகனங்களில் நிறுவப்பட்ட GPS அமைப்பு மூலம், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் தூரங்களை துல்லியமாக கண்காணித்து அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

நெடுஞ்சாலைகளில் வாகனம் நுழைந்தவுடன், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள On-Board Unit(OBU) மூலம் பயணிக்கும் தூரம் கணக்கிட தொடங்கும். 

gps toll system india

வாகனம் நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறிய உடன், எவ்வளவு தூரம் பயணம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கேற்ற கட்டணம், OBU உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு அல்லது டிஜிட்டல் வாலெட்டில் இருந்து, தானியங்கி முறையில் பணம் வசூலிக்கப்படும். 

நெடுஞ்சாலையில் போலி சுங்கச்சாவடி.., ஒன்றரை ஆண்டுகளாக அரசை ஏமாற்றி ரூ.75 கோடி வசூல்

நெடுஞ்சாலையில் போலி சுங்கச்சாவடி.., ஒன்றரை ஆண்டுகளாக அரசை ஏமாற்றி ரூ.75 கோடி வசூல்

அதேவேளையில், GPS கண்காணிப்பு நடைமுறைக்கு வரும் போது, பொதுமக்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

எப்போது நடைமுறைக்கு வரும்?

இந்த GPS மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை மே 1 ஆ,ம் திகதி முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. 

gps toll system india

முதற்கட்டமாக, டெல்லி-மும்பை விரைவுச்சாலை, பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலை, தங்க நாற்கர வழித்தடங்கள், டெல்லி-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு மற்றும் மேற்கு புற விரைவுச்சாலைகள் ஆகிய 5 நெடுஞ்சாலைகளில் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

இந்த பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், தினமும் இரு திசையிலும் 20 கி.மீ வரை கட்டணமில்லா பயணம் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், வாகனங்கள் சுங்க சாவடிகளில் ஒரு வினாடி கூட நிற்க தேவை இருக்காது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US