இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த திட்டம் - எந்த மாநிலத்தில் தெரியுமா?
இந்தியாவில் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சித்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அமித்ஷா
குஜராத் மாநிலம் காந்தி நகரில் ரூ. 316.82 கோடி ,மதிப்பில், பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான, பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி வாயிலாக கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டினார்.
அதை தொடர்ந்து பேசிய அவர், "பாரா உயர் செயல்திறன் மையம், பாரா விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி உள்கட்டமைப்பை வழங்குவதையும், மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கான உயர்மட்ட வசதிகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு அடுத்துள்ள சர்தார் படேல் விளையாட்டு வளாகத்தில் 10 பெரிய மைதானங்கள் கட்டப்படும்.
இந்தியா 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்த 10 வளாகங்களில் நடத்த முடிவு செய்துள்ளது. குஜராத் ஏற்கனவே அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டது" என பேசினார்.
இந்தியாவில் ஒலிம்பிக்
முன்னதாக, தனது அமெரிக்கா பயணத்தின் போது இந்திய பிரதமர் மோடி, 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியமான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியானது, 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடைபெற உள்ளது.
2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியை, இந்தியாவின் குஜராத் மாநில அகமதாபாத்தில் நடத்த, இந்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்றால் இந்தியாவில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் தொடராக அமையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |