இந்தியா அணியை ஒரே வரியில் அசிங்கப்படுத்திய மைக்கல் வாகன்: என்ன சொல்லியிருக்கார் பாருங்க
நியூசிலாந்து அணிக்கெதிரான தோல்விக்கு பின், இந்திய அணியை பலரும் விமர்சித்து வரும் நிலையில், மைக்கல் வாகன் அதை எல்லாம் தாண்டி விமர்சித்துள்ளார்.
டி20உலகக்கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தின் நேற்றைய இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி போட்டியை நினைத்து பார்க்க முடியும்.
ஆனால் இது எல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. இதனால் இந்திய அணியை முன்னணி வீரர்கள், ரசிகர்கள் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
India are playing 2010 Cricket .. The game has moved on .. #T20WorldCup
— Michael Vaughan (@MichaelVaughan) October 31, 2021
அந்த வகையில், மைக்கல் வாகன் இந்திய அணியின் இந்த ஆட்டம், 2010-ஆம் ஆண்டில் விளையாடும் கிரிக்கெட்டை போன்று உள்ளது என அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதைக் கண்ட ரசிகர்கள் சிலர் வாகன் சொல்வதில் என்ன தப்பு இருக்கிறது, அப்படிதானே இந்திய அணியின் ஆட்டம் உள்ளது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.